search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐபிஎல் ஏலம்"

    இந்திய முன்னாள் கேப்டன் கபில்தேவ் இப்போது ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெற்று இருந்தால் ரூ.25 கோடிக்கு ஏலம் போயிருப்பார் என கவாஸ்கர் கூறியுள்ளார். #KapilDev #Gavaskar #IPLAuction2019
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் டோனி. அவரது தலைமையில் 2007-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டு 50 ஓவர் உலக கோப்பை கைப்பற்றப்பட்டது.

    2014-ம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக டோனி திடீரென அறிவித்தார். சமீபத்தில் அவர் 20 ஓவர் போட்டி அணிக்கு தேர்வு செய்யப்படவில்லை. தற்போது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார்.

    இந்த நிலையில் டோனி இந்திய வீரர்களில் சிறந்தவர் என்று முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறி உள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    இந்தியா உற்பத்தி செய்துள்ள கிரிக்கெட் வீரர்களில் டோனி தான் சிறந்த வீரர். அவர் 90 டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளார். அதன்பின் இளம் வீரர்களுக்கு வழிவிடுவதாக கூறி டெஸ்டில் இருந்து ஓய்வு பெற்றார். தன்னை விட நாடுதான் முக்கியம் என்று கருதும் டோனிக்கு தலை வணங்குகிறேன்.



    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னாள் கேப்டன் கவாஸ்கர் கூறும்போது, “சிறந்த ஆல்ரவுண்டரான கபில்தேவ் இப்போது ஐ.பி.எல். ஏலத்தில் இடம்பெற்று இருந்தால் ரூ.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு இருப்பார்” என்று புகழ்ந்துள்ளார். #KapilDev #Gavaskar #IPLAuction2019
    இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ்சிங்கின் மதிப்பு 94 சதவீதம் சரிந்துள்ளது. #IPLAuction2019 #YuvrajSingh
    ஜெய்ப்பூர்:

    12-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடக்கிறது.

    இதையொட்டி வீரர்கள் தக்க வைப்பு, விடுவிப்பு, பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் ஏற்கனவே முடிந்து விட்டது. எஞ்சியுள்ள வீரர்களுக்கான ஏலம் ஜெய்ப்பூரில் நேற்று நடந்தது.

    இதற்கான ஏலப்பட்டியலில் மொத்தம் 356 வீரர்கள் இடம் பெற்று இருந்தனர். 5 வீரர்கள் கடைசி நேரத்தில் பட்டியலில் இடம் பெற்றனர்.

    இதில் 60 வீரர்கள் மட்டுமே ஏலம் போனார்கள் 8 அணிகளும் சேர்த்து இதற்காக மொத்தம் ரூ.106.80 கோடி செலவழித்தது.

    இந்திய அணியில் இருந்து ஒரங்கட்டப்பட்ட முன்னணி ஆல்ரவுண்டர்களில் ஒருவரான யுவராஜ்சிங்கின் மதிப்பு வெகுவாக சரிந்துள்ளது.

    அவருக்கான அடிப்படை விலை ரூ.1 கோடியாகும். முதல் சுற்றில் யுவராஜ்சிங்கை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. இதனால் அவர் ஏலம் போகமாட்டார் என்று கருதப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் 2-வது சுற்றில் அவரை அடிப்படை விலையான ரூ.1 கோடிக்கே எடுத்துக்கொண்டது.

    இதன்மூலம் யுவராஜ்சிங்கின் மதிப்பு 94 சதவீதம் சரிந்துள்ளது. அவர் 2015-ம் ஆண்டில் அதிகமாக ரூ.16 கோடிக்கு ஏலம் போனார். டெல்லி டேர்டெவில்ஸ் வாங்கியது. 2014-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ரூ.14 கோடிக்கு எடுத்து இருந்தது.

    2016-ல் இருந்து அவருக்கான விலை சரிய தொடங்கியது. அந்த ஆண்டில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ரூ.7 கோடிக்கு வாங்கி இருந்தது. கடந்த ஆண்டு ரூ.2 கோடிக்கு (கிங்ஸ் லெவன் பஞ்சாப்) விலை போனார். தற்போது அவரது விலை ரூ.1 கோடியாக குறைந்துள்ளது.

    நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் ரூ.5 கோடி கொடுத்து வேகப்பந்து வீரர் மொகித்சர்மாவை மீண்டும் ஏலத்தில் எடுத்தது. இதேபோல ருதுராஜ் கெய்க்வாட்டை ரூ.20 லட்சத்துக்கு எடுத்தது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும்பாலான வீரர்களை தக்க வைத்துக்கொண்டதால் 2 வீரர்களை மட்டுமே ஏலத்தில் எடுத்தது. #IPLAuction2019 #YuvrajSingh
    முதல் சுற்றில் விலைபோகாத யுவராஜ் சிங்கை, 2-வது சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணி அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே வாங்கியது #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று மதியம் 3.30 மணியில் இருந்து இரவு 8.40 மணி வரை நடைபெற்றது. இதில அதிகபட்சமாக உனத்கட், வருண் சக்கரவர்த்தி 8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போனார்கள்.

    ஸ்டெயின், மெக்கல்லம் போன்ற முன்னணி வீரர்கள் ஏலம் போகவில்லை. யுவராஜ் சிங்கின் அடிப்படை விலை ஒரு கோடி ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. முதல் சுற்றில் எந்த அணியும் அவரை வாங்கவில்லை. விலைபோகாத வீரர்கள் 2-வது சுற்றில் ஏலம் விடப்பட்டார்கள். அப்போது மும்பை இந்தியன்ஸ் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கே ஏலம் எடுத்தது.

    அதேபோல் நியூசிலாந்து பேட்ஸ்மேன் மார்ட்டின் கப்திலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அடிப்படை விலையான ஒரு கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.
    15 வயதே ஆன ஆல்ரவுண்டர் சிறுவனை 1.5 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்துள்ளது. #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் சில வீரர்கள் எதிர்பார்த்த விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டார்கள். சில வீரர்கள் எதிர்பார்த்த விலைக்கு ஏலம் போகவில்லை. அனுபவ வீரரகள் எந்த அணியும் சீண்டவில்லை.

    இதற்கிடையில் சில சுவாரஸ்யமான போட்டியும் நடந்தது. பஞ்சாப்-ஐ சேர்ந்த 17 வயதே ஆன பிரப்சிங் சிங்கை ஏலம் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஆர்வம் காட்டியது. பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முன்வந்தது. பின்னர் மும்பை இந்தியன்ஸ் அணியும் ஏலத்தில் குதித்தது. இதனால் அடிப்படை விலையான 20 லட்சத்தில் இருந்து கோடிகளை தாண்டியது. இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4.8 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

    அதேபோல் 15 வயதே ஆன ஆல்ரவுண்ர் சிறுவனான பிரயாஸ் ராய் பர்மானை எடுக்க போட்டி நிலவியது. இறுதியில் 1.5 கோடி ரூபாய் கொடுத்து ராயல் சேலஞசர்ஸ் பெங்களூர் அணி ஏலம் எடுத்தது.
    8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போவேன் என்று நினைக்கவில்லை என சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வருண் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். #IPLAuction2018
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான வருண் சக்கரவர்த்தியை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. 20 லட்சம் ரூபாயான அடிப்படை விலையில் இருந்து அவரது தொகை பல மடங்கு உயர்ந்தது. இறுதியில் 42 மடங்கு அதிகரித்த நிலையில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அவரை 8.40 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இதை யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரே எதிர்பார்க்கவில்லையாம். இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி கூறுகையில் ‘‘8.4 கோடி ரூபாய்க்கு ஏலம் போவேன் என்று நினைக்கவில்லை. அடிப்படை விலையான 20 லட்சம் ரூபாய்க்கே ஏலம் போவேன் என்று நினைத்தேன்.



    பஞ்சாப் அணியின் கேப்டனாக அஸ்வின் உள்ளதால், அவரிடம் இருந்து நிறைய கற்றுக்கொள்ளும் வாய்க்கு கிடைத்துள்ளது. சர்வதேச வீரர்கள் இருப்பதால் சவால்கள் நிறைந்திருக்கும. பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் பந்து வீச்சை என்னிடம் எதிர்பார்க்கலாம்’’ என்றார்.
    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதால் தென்ஆப்பிரிக்கா பேட்ஸ்மேன் இன்கிராமிற்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைத்துள்ளது. #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் தென்ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 32 வயதான பேட்ஸ்மேன் கொலின் இன்கிராம் பெயர் ஏலத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு அடிப்படை விலை 2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இதனால் எந்த அணியும் அவரை எடுக்கமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் டெல்லி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் போன்ற அணிகள் ஆர்வம் காட்டின. இதனால் அவரது மதிப்ப ஐந்து கோடியைத் தாண்டிச் சென்றது. இறுதியில் 6.4 கோடி ரூபாய் கொடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வாங்கியது. இதன்மூலம் எதிர்பாராத வகையில் 6.4 கோடி ரூபாயை தட்டிச் சென்றுள்ளார்.
    இந்திய அணியில் இதுவரை இடம்பிடிக்காத வருண் சக்கரவர்த்தி 8.4 கோடி ரூபாய்க்கும், ஷிவம் டுபே 5 கோடி ரூபாய்க்கும் ஏலம் போனார்கள். #IPLAuction2018
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்பின் இந்திய அணியில் இடம்பெறாத வீரர்கள் ஏலம் விடப்பட்டனர். அவர்களது அடிப்படை விலை ரூ. 20 லட்சமாக நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.

    ரஞ்சி டிராபியில் ஒரே ஓவரில் ஐந்து சிக்கர்கள் விளாசிய மும்பையைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இதனால் அவருக்கான தொகை கோடியைத் தாண்டிச் சென்றது. இறுதியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஐந்து கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது.

    மற்றொரு ஆல்ரவுண்டரான தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தியை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சா, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் போட்டி போட்டு விலையை உயர்த்தினார்கள். இதனால் வருணின் தொகை ரூ. 8 கோடியை தாண்டியது.

    இதனால் உனத்கட்டின் 8.4 கோடி ரூபாயைத் தாண்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இறுதியில் 8.40 கோடி ரூபாய்க்கே கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியது. இந்திய அணியில் இடம்பிடிக்காத இளம் வீரர்கள் கோடிகளை அள்ளிச் சென்றனர்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியைச் சேர்ந்த இளம் விக்கெட் கீப்பரான நிக்கோலஸ் பூரனை 4.2 கோடி ரூபாய் கொடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கியுள்ளது. #IPL2019 #IPLAuction2019
    ஐபிஎல் வீரர்கள் ஏலம் ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணியின் இடது கை சுழற்பந்து வீச்சாளரான அக்சார் பட்டேலை  ஏலம் எடுக்க கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் ஆர்வம் காட்டின. இதனால் இவரது மதிப்பு கோடியை தாண்டிச் சென்றது.

    இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 5 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இங்கிலாந்து விக்கெட் கீப்பர் பேர்ஸ்டோவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் இளம் விக்கெட் கீப்பரான நிக்கோலஸ் பூரனை ஏலம் எடுக்க கடும் போட்டி நிலவியது. இறுதியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் 4.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.

    இந்திய டெஸ்ட் அணி விக்கெட் கீப்பரான விருத்திமான் சகாவை சன்ரைசர்ஸ் ஐதராபாத் 1.20 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்தது.
    ஐபிஎல் சீசன் 2019-க்கான வீரர்கள் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூரில் நடக்கிறது. இதில் 70 வீரர்கள் தேர்வு செய்யப்பட இருக்கிறார்கள். #IPL2019
    இந்திய கிரிக்கெட் வாரியத்தால் ஆண்டுதோறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் ஐபிஎல் தொடர் நடைபெற இருக்கிறது. 11-வது சீசன் முடிந்து கடந்த மாதம் வரை வீரர்களை மாற்றிக் கொள்வதற்கான நடைமுறை நடைபெற்றது.

    இதில் தவான், டி காக் உள்பட பல்வேறு வீரர்கள் வேறு அணிக்கு மாறியுள்ளனர். இந்நிலையில் 2019 சீசனுக்கான வீரர்களின் ஏலம் வரும் 18-ந்தேதி ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்ப்பூரில் நடக்கிறது. இந்த ஏலத்தில் 50 இந்திய வீரர்களும், 20 வெளிநாடு வீரர்களையும் 8 அணி உரிமையாளர்கள் ஏலம் எடுக்க இருக்கிறார்கள்.

    இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான தொடரின்போது அதிரடி காட்டிய இளம் வீரர் ஹெட்மையரை ஏலத்தில் எடுக்க அணிகள் ஆர்வம் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×